போலீஸ் துறை சார்பில் இலவச மருத்துவ முகாம்
கூடலுார்; மசினகுடியில், போலீஸ் துறை சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாமில், 203 பேர் பயனடைந்தனர்.மசினகுடி போலீஸ் ஸ்டேஷனில், மாவட்ட போலீஸ் துறை, பாய்ஸ் கிளப், ரெட் கிராஸ் சார்பில், நேற்று இலவச மருத்துவ முகாம் நடந்தது. மசினகுடி இன்ஸ்பெக்டர் சிவகுமார் வரவேற்றார். மாவட்ட எஸ்.பி., நிஷா தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார்.கூடுதல் எஸ்.பி., சவுந்தர்ராஜன், டி.எஸ்.பி., வசந்தகுமார், மசினகுடி இன்ஸ்பெக்டர் சிவகுமார் முன்னிலை வகித்தனர்.தொடர்ந்து, கோவை தனியார் மருத்துவமனை டாக்டர்கள், நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டன.- 203 பேர் பங்கேற்று சிகிச்சை பெற்றனர்.போலீசார் கூகையில், 'மக்கள் தேவையறிந்து, போலீஸ் துறை சார்பில் மற்ற பகுதிகளிலும் இதுபோன்ற மருத்துவ முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.