உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / புளியாம்பாறை அரசு பள்ளிக்கு அரசு விருது

புளியாம்பாறை அரசு பள்ளிக்கு அரசு விருது

கூடலுார்; கூடலுார் புளியாம்பாறை அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு மாநில அரசின் விருது வழங்கப்பட்டது.'கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு,' என, சிறந்த பணிக்காக, கூடலுார் புளியம்பாறை அரசு உயர் நிலைப்பள்ளிக்கு, கடந்த கல்வி ஆண்டுக்கான பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கப்பட்டது. பள்ளி பராமரிப்புக்காக, 10 லட்சம் ரூபாய் தொகையும் தலைமை ஆசிரியர் சங்கர் பெற்று கொண்டார்.இப்பள்ளி, 2024ம் ஆண்டு சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருதையும் பெற்றுள்ளது. மாநில அரசின் பசுமை பள்ளி திட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்த கல்வியாண்டில், பொது தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இங்கு தனியார் அறக்கட்டளை உதவியுடன் 'ரோபோடிக்ஸ்' ஆய்வகம் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு 'ரோபோடிக்' பயிற்சியும் வழங்கப்படுகிறது. விருது பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர், அவருக்கு உறுதுணையாக இருந்து வரும் பள்ளி ஆசிரியர்களுக்கு பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ