மேலும் செய்திகள்
அரசு ஊழியர் சங்கம் 15 -வது மாவட்ட மாநாடு
02-Dec-2024
கூடலுார்; 'அரசு அதிகாரிகள் ஊழியர் விரோத போக்கை கைவிட வேண்டும்,' என, கூடலுாரில் நடந்த அரசு அலுவலர்கள் ஒன்றிய சங்க விழாவில் வலியுறுத்தப்பட்டது.தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒன்றிய சங்கத்தின், நீலகிரி மாவட்ட முப்பெரும் விழா கூடலுாரில் நடந்தது. மாவட்ட செயலாளர் உதயகுமார் வரவேற்றார். மாவட்ட தலைவர் ஷாஜி தலைமை வகித்தார். சத்துணவு பணியாளர்கள் ஒன்றிய மாநில இணைச்செயலாளர் கண்ணம்மாள் முன்னிலை வகித்தார். சங்கத்தின் மாநில தலைவர் அமிர்தகுமார் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி பேசினார்.கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; அரசு அலுவலகம் மற்றும் துறைகளில் தற்காலிகமாக பணியாற்றி வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும்; ஊட்டியில் உள்ள அரசு அலுவலக பணிக்காகவும், மாணவர்கள் கல்லுாரிக்கு குறித்த நேரத்தில் சென்று வர வசதியாக கூடலுார்-- ஊட்டி இடையே பஸ் வசதி செய்து தரவேண்டும்; அனைத்து அலுவலகங்களிலும் அனைத்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.விழாவில், மாநில துணை தலைவர் ராஜேந்திரன், சத்துணவு பணியாளர்கள் ஒன்றிய மாநில தலைவர் ராஜா மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் அருள் நன்றி கூறினார்.
02-Dec-2024