அரசு பள்ளி மாணவி மாநில போட்டிக்கு தேர்வு
கோத்தகிரி; கோத்தகிரி கட்டபெட்டு அரசு பள்ளி மாணவி, மாநில அளவிலான ஓவியப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.ஊட்டி புனித ஜோசப் கல்வியியல் கல்லுாரியில், பள்ளிகளுக்கு இடையேயான கலை திருவிழா போட்டி நடந்தது. அதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, மாணவ மாணவியர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். கட்டபெட்டு அரசு உயர்நிலை பள்ளியில் இருந்து பங்கேற்ற, எட்டாம் வகுப்பு மாணவி மித்ரா, ஓவியப் போட்டியில் முதலிடம் பெற்று, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். சாதித்த மாணவிக்கு, பள்ளி நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.