உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஹெத்தையம்மன் திருவிழா துவக்கம்

ஹெத்தையம்மன் திருவிழா துவக்கம்

கோத்தகிரி: நீலகிரியில் படுகர் கிராமங்களில் ஹெத்தையம்மன் திருவிழா நேற்று துவங்கியது.விரதம் இருந்து வரும் செங்கோல் பக்தர்கள் நேற்று காலை, சிராமத்தில் உள்ள கோவிலில் இருந்து, பாரம்பரிய உடை அணிந்து, வண்ணக்குடைகளின் கீழ், செங்கோல் ஏந்தி, சற்று தொலைவில் அமைந்துள்ள மடிமனைக்கு அம்மனை அழைத்து சென்றனர். அங்கு, நாள்தோறும் இரவு, அம்மனின் அருள்வாக்கு நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இவ்விழாவின், ஒரு நிகழ்வாக நேற்று கேர்பெட்டா கிராமத்தில் விழா நடந்தது. அருள் வாக்கு, அன்னதானம் இடம் பெற்றது. வரும், 15ம் தேதி பேரகணி மடிமனை, 17ம் தேதி காத்து குளி மடிமனை, 18ம் தேதி ஒன்னதலை மடிமனைகளில் விழா நடக்கிறது. கத்திகை மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை