உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அதிக நுகர்வு பேரிடருக்கு காரணம் பள்ளி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல் பள்ளி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்

அதிக நுகர்வு பேரிடருக்கு காரணம் பள்ளி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல் பள்ளி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்

மஞ்சூர், ;'பேரிடர்களுக்கு காரணம் மிக மிஞ்சிய பொருள் நுகர்வு,' என, விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.மஞ்சூர் பாரதியார் நுாற்றாண்டு நினைவு பெண்கள் உயர்நிலை பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பாபி தலைமை வகித்தார். குன்னூரில் உள்ள லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் பேசியதாவது:உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் போன்ற பொருளாதார கொள்கையால் நாட்டில் மக்களிடையே நுகர்வு அதிகரித்துள்ளன. கல்வி முறையே பொருள் ஈட்டுவதற்கான வழிமுறையாக மாறியுள்ளது. ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் பள்ளி பருவத்திலேயே வந்து விடுகிறது. நுகர்வோர் விழிப்புணர்வுடன் இருக்கவும், பிரச்னைகளை எதிர்கொள்ளவும், 1986 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் இயற்றப்பட்டன.பேரிடர்களுக்கு காரணம் மிக மிஞ்சிய பொருள் நுகர்வு தான் ; கார்பன் வெளியீடு அதிகரித்து, புவி வெப்பமயமாகி, காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு, இயற்கை பேரிடர்கள் நடக்க இதுவே காரணம். எனவே, எளிமையான வாழ்க்கை வாழ பழகிகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளரான ஆசிரியர் கிரண் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ