உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாநில வாலிபால் போட்டி வருமான வரித்துறை அணி வெற்றி

மாநில வாலிபால் போட்டி வருமான வரித்துறை அணி வெற்றி

கோத்தகிரி, ; கோத்தகிரியில் நடந்த மாநில அளவிலான வாலிபால் போட்டியில், வருமானவரித்துறை அணி வெற்றி பெற்றது.மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கோத்தகிரி காந்தி மைதானத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கோப்பைக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டி, இரவு மின்னொளியில் நடந்தது.வருமானவரித்துறை அணி மற்றும் கோவை பிரதர்ஸ் அணிகளுக்கு இடையே, இறுதி போட்டி நடந்தது. இரு அணிகளும் தலா ஒரு செட்டை வென்ற நிலையில், வெற்றியை நிர்ணயிக்கும், மூன்றாவது செட் விறு,விறுப்பாக நடந்தது. அதில், வருமான வரித்துறை அணி, 25:21 என்ற புள்ளி கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு, பரிசு கோப்பையுடன், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த கோவை பிரதர்ஸ் அணிக்கு, பரிசு கோப்பையுடன், 30 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது.தொடர்ந்து, நடந்த மாவட்ட அளவிலான இறுதிப் போட்டியில், ஆல்வின் பிரதர்ஸ் அணி மற்றும் ஏ.எஸ்.எப்., அணிகளுக்கு இடையே நடந்தது. அதில், ஆல்வின் பிரதர்ஸ் அணி வெற்றி பெற்றது.இதில், முதல் இடம் பிடித்த அணிக்கு, 20 ஆயிரம், இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு, 15 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. விளையாட்டு அணி மாநில துணை செயலாளர் வாசிம் ராஜா மற்றும் மாவட்ட அமைப்பாளர் ஆல்வின் ஆகியோர் பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ