உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கல்வி கற்றால் மட்டுமே எதிர்காலம் வளமாக அமையும் கல்வி மட்டுமே வாழ்க்கையை உயர்த்தும் ஊராட்சி ஒன்றிய பள்ளி நிகழ்ச்சியில் தகவல்

கல்வி கற்றால் மட்டுமே எதிர்காலம் வளமாக அமையும் கல்வி மட்டுமே வாழ்க்கையை உயர்த்தும் ஊராட்சி ஒன்றிய பள்ளி நிகழ்ச்சியில் தகவல்

பந்தலுார்; 'மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கினால் மட்டுமே, எதிர்கால வாழ்வு சிறப்பாக அமையும்,' என, தெரிவிக்கப்பட்டது. பந்தலுார் அருகே, 'மேபீல்டு' ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கூடலுார் கல்வி மாவட்ட அளவில் மாணவர்களுக்கான சீருடை, நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட தளவாட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் பாபு வரவேற்றார். பந்தலுார் தாசில்தார் சிராஜூநிஷா தலைமை வகித்து, தளவாட பொருட்களை வழங்கி பேசுகையில், ''ஆரம்ப கல்வி முதல் அனைத்து தளவாட பொருட்களை இலவசமாக வழங்கி, தரமான கல்வியும் அரசு பள்ளிகளில் போதிக்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் படித்த பலர் தற்போது உயர் பதவிகளை வகித்து வருகின்றனர். எனவே, பெற்றோர்கள் அரசு பணிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க முன்வர வேண்டும். அதேபோல் மாணவர்களும் கல்வி கற்றால் மட்டுமே எதிர்கால வாழ்வு வளமாக அமையும் என்பதை மனதில் வைத்து, சிறப்பாக கல்வி கற்க வேண்டும்,'' என்றார்.வருவாய் ஆய்வாளர் வாசுதேவன், வி.ஏ.ஓ.,க்கள் அசோக்குமார், சபீர்கான், பள்ளி மேலாண்மை குழு தலைவர் தர்ஷினி உட்பட பலர் பங்கேற்றனர். நிர்வாகிகள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ