உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கீழ்குந்தா பேரூராட்சியில் ரூ.10 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம்

கீழ்குந்தா பேரூராட்சியில் ரூ.10 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம்

ஊட்டி; கீழ்குந்தா பேரூராட்சியில், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வரும் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். குந்தா வட்டத்தில், ' உங்களைத் தேடி உங்கள் ஊரில் ' திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் , மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை மூலம் மருந்து பெட்டகம் , கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இத்தலார் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தின் கீழ் , மாணவ , மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார். எடக்காடு பகுதியில் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, குந்தாபாலத்தில் உள்ள கிடங்குகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.'கீழ்குந்தா பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்து , பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,'என, உத்தரவிட்டார். மாலையில், மஞ்சூர் அருகே வெள்ளத்திக்கம்பை ஆதிவாசி கிராமத்திற்கு சென்ற கலெக்டர் அப்பகுதி மக்களிடம் அடிப்படை வசதிகள் , குறைகளை கேட்டறிந்தார். அரசு துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ