உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கலிங்கனட்டி குறுக்கு பாதை; சீரமைத்தால் மக்களுக்கு பயன்

கலிங்கனட்டி குறுக்கு பாதை; சீரமைத்தால் மக்களுக்கு பயன்

கோத்தகிரி; ஊட்டி ஊராட்சி ஒன்றியம், கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட, ஒன்னதலை மற்றும் கலிங்கனட்டி கிராமங்களில், 250க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இவ்விரு கிராமங்களுக்கு இடையே நுாறு ஆண்டுகளுக்கு மேலாக குறுக்குபாதை அமைந்துள்ளது. இப்பாதையை கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தவிர, பல ஏக்கர் பரப்பளவில் தேயிலை மற்றும் காய்கறி விவசாயம் இப்பகுதியில் மேற்கொள்ளப்படுகிறது. விளை பொருட்களை கொண்டு செல்ல சாலை வசதி இல்லாததால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுஉள்ளனர். மேலும், வாகன போக்குவரத்து இல்லாத நிலையில், டி. மணியட்டி வழியாக, 4 கி.மீ., துாரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.'இந்த பாதையை 'கான்கிரீட்' சாலையாக மாற்ற வேண்டும் என, வலியுறுத்தி, சமூக ஆர்வலர் மூர்த்திசென்னன், கக்குச்சி ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ