மேலும் செய்திகள்
அவிநாசி நகராட்சியானது! அரசாணை வெளியீடு
30-Mar-2025
கோத்தகிரி; கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி, மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்ந்தது.கோத்தகிரி பேரூராட்சி, 1960ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 'கோத்தகிரி நகரம் மற்றும் கிராம புறங்கள்,' என, மொத்தம் 21 வார்டு களில், 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 'மக்கள் தொகை அடர்த்தி, ஆண்டு வருமானம் மற்றும் பொருளாதாரம் அடிப்படையில், நகராட்சியாக தரம் உயர வாய்ப்புள்ளது,' என, கடந்த பல ஆண்டுகளாக எதிர்பார்ப்பு இருந்து வந்தது. தற்போது, மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, கடந்த ஆண்டு டிச., 12ம் தேதி உத்தேச ஆணை வெளியிடப்பட்டது. தற்போது, அரசாணை வெளியிடப்பட்டது. வரி இனங்கள் உயருமா...?
கோத்தகிரி நகராட்சியாக மாறும் பட்சத்தில், வரி இனங்கள் உயரக்கூடும் என்ற அச்சத்தில், பொதுமக்கள் உள்ளனர். குறிப்பாக, பொரங்காடு சீமை படுகர் நல சங்கம் சார்பில், 'கோத்தகிரி பேரூராட்சியில், 16 படுகர் கிராமங்கள் உள்ளன. நகராட்சியாக தரம் உயரும் பட்சத்தில், வீட்டு வரி, சொத்து வரி கணிசமாக உயர்வதுடன், வீடுகள் கட்ட அனுமதி பெற கடினம்,' என, ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.அதற்கு அரசு தரப்பில், 'சொத்து வரி விதிப்பு முறை, கட்டட அனுமதி முறை பேரூராட்சிக்கும், நகராட்சிக்கும் ஒரே விதிமுறைகள் தான் நடைமுறையில் உள்ளன. இதனால், எவ்வித பாதிப்பும் இல்லை. மேலும், நகராட்சியாக தரம் உயரும் போது, சுகாதாரமும், திடக்கழிவு மேலாண்மையும் மேம்படும். உள்கட்டமைப்பு வசதிகள் பெருகும்,' என, விளக்கம் அளிக்கப்பட்டது.இந்நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவி காலம் முடியும் வரை, பேரூராட்சி மன்ற உறுப்பினர்களாகவே அவர்கள் நீட்டிப்பர். அடுத்து நடைபெறும், உள்ளாட்சி தேர்தலில், எல்லை வரையறை தீர்மானிக்கப்பட்டு, நகராட்சிக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.மணிகண்டன், வியாபாரி, கோத்தகிரி: கோத்தகிரி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்வது பெருமை. அதே நேரத்தில், வணிகர்கள் மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கு வரி உயரும் என்ற அச்சம் உள்ளது. கோத்தகிரியில் நகராட்சிக்கு தேவையான, வசதிகள் குறைவு. குறிப்பாக, பார்க்கிங் வசதி இல்லை. முதலில், சுகாதாரத்திற்கும், திடக்கழிவு மேலாண்மைக்கும் தேவையான முன்னேற்பாடுகள் அவசியம். நாகேந்திரன், வியாபாரி,கோத்தகிரி: கோத்தகிரி நகரில் தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லை. நகர மக்களின் குடிநீர் தேவை சரியான முறையில் தீர்க்கப்படவில்லை. நகராட்சியாக தரம் உயரும் பட்சத்தில், நலத்திட்டங்களுக்காக கூடுதல் பணம் ஒதுக்கி, நகரை மேம்படுத்தவது அவசியம். இருப்பினும், இந்த அறிவிப்பால் பாமர மக்களுக்கு எந்த பயனும் இல்லை.மணிசேகர், வியாபாரி, கோத்தகிரி: கோத்தகிரி பேரூராட்சியை நகராட்சியாக மாற்றுவதன் மூலம், பாதாள சாக்கடை, பஸ் நிலைய மேம்பாடு, பார்க்கிங் வசதி ஆகியவை மேம்பட்டால் அனைவருக்கும் பயன் ஏற்படும். மாணவ, மாணவியர் பயன்பெற அரசு கல்லுாரி கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகள் கட்ட அனுமதி பெறுவதில் சிக்கல் உள்ளது. நகராட்சியாக தரம் உயர்வதால் கட்டுமான அனுமதி வாங்குவதில் மேலும் சிரமம் ஏற்படும். இதனால், நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவர்.
30-Mar-2025