உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / புத்துணர்வு வாலிபால் போட்டி கீழ் கோத்தகிரி ஏ.எஸ்.எப்., அணி வெற்றி

புத்துணர்வு வாலிபால் போட்டி கீழ் கோத்தகிரி ஏ.எஸ்.எப்., அணி வெற்றி

கோத்தகிரி; கோத்தகிரியில் நடந்த மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில், கீழ் கோத்தகிரி ஏ.எஸ்.எப்., அணி கோப்பையை தட்டி சென்றது.கோத்தகிரியில் ஈஷா யோகா மையம் சார்பில், 16வது கிராமோத்சவம் புத்துணர்வு வாலிபால் போட்டி, ஜூட்ஸ் உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இப்போட்டி தொடரில், பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம், 16 அணிகள் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தின.கோத்தகிரி இட்டக்கல் குழும இயக்குனர் ராஜேஷ் சந்தர் போட்டியை துவக்கி வைத்தார். இறுதி போட்டி, கீழ் கோத்தகிரி ஏ.எஸ்.எப்., அணி மற்றும் குயின்ஸ் சோலை அணிகளுக்கு இடையே நடந்தது.மிகவும் பரபரப்பாக நடந்த இறுதி போட்டியில், கீழ் கோத்தகிரி ஏ.எஸ் எப்., அணி, 25: 25 மற்றும் 25:16 என்ற புள்ளிக் கணக்கில், வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது.வெற்றி பெற்ற அணிகளுக்கு மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது. கோத்தகிரி இட்டக்கல் குழும தலைவர் போஜராஜன், கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, வெற்றி பெற்ற வீரர்களுக்கு, பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினர்.இதற்கான ஏற்பாடுகளை, கோத்தகிரி ஈஷா யோகா மையத்தை சேர்ந்த கணேஷ், ஆசிரியர் செந்தில்குமார், ஊர் பிரமுகர் காமராஜ் மற்றும் ஈஷா யோகா மைய அங்கத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ