உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அனுமதி இன்றி நிலம் சமன்படுத்தும் பணி; கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகள்

அனுமதி இன்றி நிலம் சமன்படுத்தும் பணி; கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகள்

பந்தலுார்; பந்தலுார் அருகே எருமாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், அனுமதியின்றி பொக்லைன் பயன்படுத்தி மலையை கரைக்கும் பணி நடந்து வருகிறது. எருமாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், சேரங்கோடு ஊராட்சி மூலம், கலைஞர் கனவு இல்லம் கட்டும் பயனாளிகளுக்கு பொக்லைன் மூலம் நிலம் சமன்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், குறைந்த அளவு இடங்களுக்கு மட்டும் அனுமதி பெற்று, அதனை வைத்து பல்வேறு இடங்களிலும் பொக்லைன் மூலம் மலைமுகடுகள் சமன்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், புஞ்சைகொல்லி பகுதியில், விதிகளை பொக்லைன் பயன்படுத்தி சாலை அமைத்து சரிவான நிலப்பகுதி சமன் படுத்தப்பட்டு உள்ளது. இதன் கீழ்ப்பகுதியில் நீரோடை பாயும் நிலையில், அதில் மண்ணை கொட்டி அதனையும் மூடும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் கூறுகையில், 'இந்த பகுதியில் அனுமதியின்றி பொக்லைன் பயன்படுத்தப்பட்டு வருவது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !