மேலும் செய்திகள்
பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்
03-Nov-2026
கோத்தகிரி: கோத்தகிரி தும்மனட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், நுாலக வார நிறைவு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) ஸ்ரீனிவாசன் தலைமை வசித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் மல்லதேவன், உறுப்பினர்கள் ஆனந்த் மற்றும் பாபு ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும், கிளை நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். நுாலகர் ஜெயக்குமார் நன்றி கூறினர். * கீழ்கோத்திகிரி கிளை நுாலகத்தில், நுாலக வார விழாவை முன்னிட்டு, புத்தகத் திருவிழா நடந்தது. நுாலக வாசகர் வட்ட தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார். ஆசிரியர் சுரேஷ் கண்ணன் தலைமையில், சோலுார் மட்டம் பள்ளி மாணவர்களுக்கு, பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட அறிவு திறன் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், 50 பேர், உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். ஆசிரியை சாராதாமணி உட்பட, வாசகர் வட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர். நுாலகர் சித்ரா நன்றி கூறினார்.
03-Nov-2026