மேலும் செய்திகள்
ரோட்டில் கால்நடைகள்: வாகன ஓட்டுநர்கள் அவதி
08-Mar-2025
பந்தலுார்: பந்தலுார் பஜாரில் உலா வரும் கால்நடைகளை, நகராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்த முழுமையான நடவடிக்கை எடுக்காதது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.பந்தலுார் பஜார் சாலை, ஆக்கிரமிப்பாளர்களால் சூழப்பட்டு சிறிய சாலையாக மாறி உள்ளது. சாலையின் இரண்டு பக்கங்களிலும் வாகனங்களை நிறுத்துவதால், பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. பாதசாரிகள் நடந்து செல்ல ஏற்படுத்தப்பட்ட நடைபாதைகளை, வியாபாரிகள் ஆக்கிரமிப்பதால் அதிலும் நடக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், கால்நடை வளர்ப்பவர்கள், தங்கள் கால்நடைகளை சாலைகளில் மேய விடுவதால், வாகன ஓட்டுனர்கள் மற்றும் பாதசாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே, கால்நடைகளை சாலைகளில் திரியவிடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
08-Mar-2025