ஊரக வாழ்வாதார இயக்கத்தில் கடனுதவி; 6,903 மகளிர் சுய உதவிக்குழுக்கள் பயன்
ஊட்டி; ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வாயிலாக நட்பாண்டில், 6,903 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வாயிலாக, மகளிர் சுய உதவி குழுவினருக்கு, நகர பஸ்களில் இலவசமாக பயணிக்கும் திட்டம்,சுய உதவிக்குழு இயக்கத்தை மாநில முழுவதும் பரவலாக்கி கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சுய சார்பு தன்மை வாயிலாக பெண்களின் நிலையை மேம்பாடு அடைய செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மகளிர் திட்டத்தின் வாயிலாக வழங்கப்பட்ட கடனுதவி குறித்த செய்தி குறிப்பு: புதிய மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைத்தல், சுழல் நிதி, வங்கி கடன் இணைப்பு மற்றும் பெருங்கடன், தனிநபர் கடன், தொழில் முனைவோர் கடன், சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி போன்ற பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, நீலகிரி மாவட்டத்தில், மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்க சார்பில், 2021-22ம் ஆண்டில், 372.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 6,432 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி; 2022-23ம் ஆண்டில், 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5,469 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி; 2023-24ம் ஆண்டில், 374 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 6,717 மகளிர் குழுக்களுக்கு கடனுதவி; 2024-25ம் ஆண்டில் மே, 31ம் தேதி வரை, 446 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 6,019 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.