உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கடைக்குள் புகுந்த லாரி: அதிகாலையில் விபத்து

கடைக்குள் புகுந்த லாரி: அதிகாலையில் விபத்து

குன்னுார்: குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கே.என்.ஆர்., அருகே கடைக்குள் லாரி புகுந்தது. ஊட்டி மற்றும் குன்னுார் பகுதிகளுக்கு திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் இருந்து லாரி ஒன்று, நேற்று அதிகாலை கோழி இறைச்சியை கொண்டு வந்து இறக்கி விட்டு, மற்ற பகுதிகளுக்கு வினியோகிக்க அதிகாலையில் திரும்பி சென்று கொண்டிருந்தது. லாரியை பல்லடம் பகுதியை சேர்ந்த டிரைவர் கண்ணன்,28, ஓட்டி வந்தார். லாரி கே.என்.ஆர்., அருகே சென்ற போது திடீரென எதிரே கார் வந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து வேகத்தடை மீது ஏறி அருகில் இருந்த கடைக்குள் புகுந்தது. அங்கு யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. குன்னுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !