உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கடைவீதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

கடைவீதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

கோத்தகிரி ; கோத்தகிரி கடைவீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் மகாகும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது.கோத்தகிரி கடைவீதியில், பாரம்பரியமிக்க அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 12 ஆண்டுகளுக்குப் பின்பு நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதிகாலை, 5:00 மணி முதல் திருப்பள்ளி எழுச்சி, மங்கல இசை, திருக்கோவிலை புனித நீர்கொண்டு துாய்மை செய்தல், தெய்வ திருமேனிகளுக்கு அலங்காரம், காப்பு அணிவித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, 108 மூலிகைகள் நல்குதல், வேள்வி சாலையில் இருந்து, மூலமூர்த்திக்கு அருள் நிலை ஏற்றல், பேரொளி வழிபாடு, மலர் அர்ச்சனை, திருமுறை விண்ணப்பம் மற்றும் ராகதாளம் இசைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன.காலை, 6:00 மணிமுதல், 7:30 மணிவரை திருக்குடங்கள் திருக்கோவிலை வலம் வருதல், அருள்மிகு சித்தி விநாயகர், அருள்மிகு கன்னி மாரியம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடந்தது. தொடர்ந்து, காலை, 9:00 மணி முதல், 10:30 மணி வரை, அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், திருக்குட நன்னீராட்டு பெருவிழா மிக சிறப்பாக நடந்தது. கோவை சாந்தலிங்க மருதாசல அடிகளார் முன்னிலையில், கோவை ராமானந்தா குமரகுருபர சுவாமிகள், பழனி சாது சண்முக அடிகளார், தென்சேரிமலை ஆதீனம் முத்து சிவ ராமசாமி அடிகளார், கோவை பெரிய நாயக்கன்பாளையம் மணிகண்ட சுவாமிகள் மற்றும் கோவை காமாட்சிபுரம் ஆதீனம் சாக்தஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகளுடன் திருக்குடம் நன்னீராட்டு பெருவிழா சிறப்பாக நடந்தது.தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேக மலர் அலங்கார வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், கோத்தகிரி உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் மிக சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை