உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பராமரிப்பு இல்லாத வண்ணத்து பூச்சி பூங்கா; கோடை சீசனுக்குள் சீரமைத்தால் பயன்

பராமரிப்பு இல்லாத வண்ணத்து பூச்சி பூங்கா; கோடை சீசனுக்குள் சீரமைத்தால் பயன்

கூடலுார்; 'கூடலுார் தோட்டக்கலை பண்ணையில் சேதமடைந்துள்ள, வண்ணத்துப்பூச்சி பூங்காவை சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.கூடலுார் நாடுகாணி அருகே, பொன்னுார் தோட்டக்கலை பண்ணையை சுற்றுலா தலமாக மாற்றும் வகையில், இரண்டு பெரிய பசுமை குடில்கள் அமைத்து, அதனுள் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைத்தனர். இதனை, 2015 ஜூன் மாதம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.ஆனால், எதிர்பார்த்த அளவில் பூங்காவுக்கு பட்டாம் பூச்சிகள் வரவில்லை. இதனால், சுற்றுலா பயணிகளையும் கவரவில்லை.தற்போது, இங்குள்ள பசுமை குடில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைத்து, பட்டாம்பூச்சிகள் கவரக்கூடிய தாவரங்களை வளர்ப்பதுடன், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் இப்பகுதி சுற்றுலா தலமாக மாற வாய்ப்புள்ளது. மக்கள் கூறுகையில், 'சேதமடைந்துள்ள, வண்ணத்துப்பூச்சி பூங்காவை சீரமைத்து, சுற்றுலா பயணிகள் கவரும் வகையில் பூந்தோட்டம் அமைக்க வேண்டும். இதன் மூலம், இப்பகுதியில் சுற்றுலா மேம்படுவதுடன், பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை