மேலும் செய்திகள்
அரசின் இலவச கோடைகால பயிற்சி முகாம் 25ல் துவக்கம்
23-Apr-2025
கூடலுார், : கூடலுார் மார்த்தோமா நகர் அருகே உள்ள, பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம், பராமரிப்பு இல்லாததால் வீரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்கூடலுார் மார்த்தோமா நகர், அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பையொட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 24.5 லட்சம் ரூபாய் நிதியில், கட்டப்பட்ட பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம், 2005 ஏப்.,ல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.இங்கு, இறகு பந்து மைதானம், உடற்பயிற்சி கூடம் செயல்பட்டு வருகிறது. இறகு பந்து விளையாடவும், உடற்பயிற்சி மேற்கொள்ளவும் காலை, மாலை தினமும் வீரர்கள் வந்து செல்கின்றனர்.இந்த அரங்கம் பராமரிப்பு இல்லாததால், இறகு பந்து பயிற்சி தரைத்தளம் உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்துள்ளது. விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள சிரமப்பட்டு வருகின்றனர். விளையாட்டு வீரர்கள் கூறுகையில்,'இந்த அரங்கில் பயிற்சி பெறும் வீரர்கள், மாவட்ட அளவில் நடைபெறும் இறகு பந்து போட்டிகளில் அதிக அளவில் வெற்றி பெற்று வருகின்றனர். ஆனால், பயிற்சிக்கூடம் திறக்கப்பட்டு, 20 ஆண்டுகள் ஆகிய நிலையில், முழுமையான பராமரிப்பு இன்றி சேதமடைந்துள்ளது. பயிற்சிக்கு வரும் வீர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் ஆய்வு செய்து, முழுமையாக சீரமைக்க வேண்டும்,' என்றனர்.
23-Apr-2025