மேலும் செய்திகள்
தொழிற்சாலைக்குள் சிறுத்தை தொழிலாளர்கள் அச்சம்
14-Nov-2024
குன்னுார்: குன்னுாரில், செக் மோசடி தொடர்பாக, அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை முன்னாள் ஊழியர் சிறையில் அடைக்கப்பட்டார்.மசினகுடியை சேர்ந்தவர் ராமலிங்கம்,42. குன்னுார் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையின் முன்னாள் ஊழியர். இவருக்கு ஜெயக்குமார் என்பவர் கொடுத்த, 5 லட்சம் ரூபாய் கடனுக்கு, ராமலிங்கம் காசோலையை வழங்கியுள்ளார். காசோலையை வங்கியில் செலுத்தியபோது, கணக்கில் பணம் இல்லாமல் திரும்பியது. இதனால் கடந்த, 2021ல், ராமலிங்கம் மீது அருவங்காடு போலீசில் புகார் கொடுத்தார். இந்த வழக்கு, குன்னுார் விரைவு நீதிமன்றத்தில் நடந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. எனினும், தொகை வழங்காமல், தலைமறைவாக இருந்த நிலையில்,'கண்டிஷன் வாரண்ட்' பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, எஸ்.பி., நிஷா உத்தரவின் பேரில், குன்னுார் டி.எஸ்.பி., வீரபாண்டி தலைமையில், குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தி, மசினகுடி ஆனைகட்டி பகுதியில் ராமலிங்கத்தை-- கைது செய்தனர். அவரை, குன்னுார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.
14-Nov-2024