உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  ஆவணங்களின்றி எடுத்து வந்த பணம் பறிமுதல்

 ஆவணங்களின்றி எடுத்து வந்த பணம் பறிமுதல்

பந்தலூர்:உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த, 53 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.கோவையில் இருந்து பொன்னானி பகுதிக்கு நேற்று முன்தினம் அரசு பஸ் வந்துள்ளது. நடுவட்டம் பகுதியில் பஸ்சை நிறுத்தி தேர்தல் பறக்கும் படை அலுவலர், ரமேஷ் தலைமையிலான குழுவினர் பயணிகளிடம் சோதனை செய்தனர். அதில், பந்தலூர் அருகே, உப்பட்டி பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் ஆவணங்களின்றி, 53 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து வந்தது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை, அலுவலர்கள் கூடலூர் ஆர்.டி.ஓ. குணசேகரனிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை