உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பந்தலுார் வனப்பகுதிகளில் மலை இருவாச்சிகள்; பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி

பந்தலுார் வனப்பகுதிகளில் மலை இருவாச்சிகள்; பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி

பந்தலுார்; பந்தலுார் சுற்று வட்டார வனப்பகுதிகளில், சமீப காலமாக மலை இருவாச்சிகள் காணப்படுவது பறவை ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.இருவாச்சி பறவைகள், உலகம் முழுவதும், 54 வகையும், நம் நாட்டில், 9- வகையும், தென் மாநிலத்தில், 4- வகையும் உள்ளன. அதில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகளவில் காணப்படுகின்றன.தமிழகத்தில் பெரும்பாத இருவாச்சி, மலை இருவாச்சி, சாம்பல் நிற இருவாச்சி, மலபார் பாத இருவாச்சி ஆகியவை உள்ளது. அதில், தற்போது, பந்தலூர் அருகே கிளன்ராக், கரியசோலை, கோட்டை மலை வனப்பகுதிகளில், மலை இருவாச்சிகள் அதிகளவில் காணப்படுகின்றன. வனப்பகுதிகளில் பல்வேறு வகை பழங்கள் பழுத்துள்ளதால் அவற்றை உட்கொள்ள இவைகள் வருகின்றன. பறவை ஆர்வலர்கள் கூறுகையில், 'மலை இருவாச்சிகள் வாழும் அல்லது காணப்படும் பகுதிகள் செழுமையான வனத்தை கொண்டதாக இருக்கும். வனங்களையும், உயரமான மரங்களையும் பாதுகாத்தால் மட்டுமே இதுபோன்ற அரிய பறவைகளை பாதுகாக்க முடியும்.இப்பகுதியில் உள்ள இருவாச்சிகளை வனத்துறை கண்காணிக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ