உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வளர்ப்பு யானைகள் உடல் எடை அதிகரிப்பு முதுமலை வன ஊழியர்கள் மகிழ்ச்சி

வளர்ப்பு யானைகள் உடல் எடை அதிகரிப்பு முதுமலை வன ஊழியர்கள் மகிழ்ச்சி

கூடலுார் : முதுமலையில் உள்ள வளர்ப்பு யானைகள் உடல் எடை, 250 கிலோ வரை அதிகரித்துள்ளது.முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு, அபயாரண்யம் யானைகள் முகாமில், இரண்டு குட்டிகள் உட்பட, 29 யானைகளை பராமரித்து வருகின்றனர். இங்குள்ள, வளர்ப்பு யானைகளுக்கு நான்கு மாதத்திற்கு ஒருமுறை, உடல் எடை பார்க்கப்பட்டு, அதன் அடிப்படையில் உணவு கட்டுப்பாடு உடற்பயிற்சி வழங்கப்படுகிறது.அதன்படி, யானைகள் உடல் எடை பார்க்கும் பணி, தொரப்பள்ளி சோதனை சாவடி அருகே உள்ள, வனத்துறைக்கு சொந்தமான எடை மேடையில் நேற்று நடந்தது. வனச்சரகர் சிவக்குமார், கால்நடை டாக்டர் ராஜேஷ், வன கால்நடை ஆய்வாளர் ரமேஷ், வனக்காப்பாளர் ரஞ்சிதா முன்னிலையில் உடல் எடை பார்க்கப்பட்டது. யானைகளின் உயரமும் அளவிடப்பட்டது. யானைகளின் உடல் எடை அதிகரித்திருப்பதால் வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில், 'முகாமில் உள்ள, 29 யானைகளில் முதல் கட்டமாக, 9 வளர்ப்பு யானைகளில் எடை பார்க்கப்பட்டது. அதில், யானைகள் உடல் எடை, 30 கிலோ முதல் 250 கிலோ வரை அதிகரித்துள்ளது. இரண்டு குட்டி யானைகள் பாதுகாப்பாக பராமரித்து வரப்படுகிறது. மஸ்து ஏற்பட்டுள்ள ஆறு யானைகள் உட்பட மீதமுள்ள யானைகளின் உடல் எடை மற்றொரு நாளில் பார்க்கப்படும்,'என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி