மேலும் செய்திகள்
வாலிபர் சாவு
13-Apr-2025
மஞ்சூர்:நீலகிரி மாவட்டம், மஞ்சூர் ஹட்டியை சேர்ந்த ராஜ்குமார், 62. மேல் கொட்டரகண்டியில் வசித்தார். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். 15 ஆண்டுகளுக்கு முன் இவரது மனைவி பிரிந்து சென்று விட்டதால் தனியாக வசித்தார்.நீலகிரி மாவட்ட காங்., பொதுச்செயலராக இருந்தார். ராஜ்குமார் சில ஆண்டுகளாகவே கொட்டரகண்டியில் உள்ள வாடகை வீட்டில் தனியாக வசித்தார். நேற்று காலை இவரது வீட்டில் துர்நாற்றம் வீசியது. மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மஞ்சூர் போலீசார் பார்த்தபோது, ராஜ்குமார் இறந்து கிடந்தது தெரியவந்தது. எஸ்.பி., நிஷா, ரூரல் டி.எஸ்.பி., ராஜ்குமார் ஆகியோரும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். போலீசார் கூறுகையில், 'ராஜ்குமாரின் உடல் அழுகிய நிலையில் காணப்படுவதால், அவர் இறந்து, நான்கு நாட்களுக்கு மேல் ஆகி இருக்க வாய்ப்புள்ளது. அவரது மரணம் குறித்து முழு விசாரணை நடத்திய பின் விபரம் தெரிவிக்கப்படும்' என்றனர்.
13-Apr-2025