உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நேந்திரன் வாழை கொள்முதல் விலை குறைந்ததால் நஷ்டம்

நேந்திரன் வாழை கொள்முதல் விலை குறைந்ததால் நஷ்டம்

கூடலுார்: கூடலுார், பந்தலுார் விவசாயிகள், நேந்திரன் வாழை உற்பத்தியில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். நடப்பு ஆண்டு ஏப்., மாதம் கிலோவுக்கு, 60 ரூபாய் வரை விலை கிடைத்தது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், மே மாதம், கிலோ, 35 ரூபாயாக குறைந்தது. இதே , விலை தொடர்ந்தால் போதும் என, விவசாயிகள் எதிர்பார்த்தனர். விலை படிப்படியாக கடந்து கடந்த மாதம் கிலோ, 16 ரூபாய்க்கு கொள்முதல் செய்தனர். தற்போது, கிலோ, 13 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது. விவசாயத்துக்கு பெற்ற கடனை கூட செலுத்த முடியாமல் விவசாயிகள் கண்ணீர் விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விவசாயி ஆனந்தசைனன் கூறுகையில்,''கூடலுாரில் ஒவ்வொரு ஆண்டும், 1,500 ஏக்கரில் நேகந்திரன் வாழை பயிரிட்டு வருகின்றனர். ஏக்கருக்கு ஆறு முதல் பத்து டன் வரை, நேந்திரன் வாழை கிடைக்கும். கடந்த மாதம், 16 ரூபாயாக இருந்த விலை தற்போது 13 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது. விவசாயிகள் கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ளனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ