உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரி மாவட்ட ஹாக்கி போட்டி ஸ்ட்ரைக்கிங் லெவன் அணி வெற்றி

நீலகிரி மாவட்ட ஹாக்கி போட்டி ஸ்ட்ரைக்கிங் லெவன் அணி வெற்றி

குன்னுார்; நீலகிரி மாவட்ட அளவிலான ஹாக்கி இறுதி போட்டியில், ஸ்ட்ரைக்கிங் லெவன் அணி வெற்றி பெற்றது.குன்னுார் அறிஞர் அண்ணா அரசு மேல் நிலை பள்ளி மைதானத்தில், 'ஹாக்கி யூனிட் ஆப் நீலகிரிஸ்' அமைப்பு; வனமகன் குழுமம் மற்றும் நெப்டியூன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், நீலகிரி மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி நடந்தது.அதில், மாவட்டத்திலிருந்து, 23 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில், குன்னுார் ஸ்ட்ரைக்கிங் லெவன் அணி; யுனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதின. இரு அணிகளும் தலா இரு கோல்கள் அடித்தன.இதனால், டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில், ஸ்டிரைக்கிங் லெவன் அணி, 5க்கு 4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நடுவர்களாக தேசிய நடுவர் பிரசாந்த் மணி, பாதுஷா ஆகியோர் பணியாற்றினர். பரிசளிப்பு விழாவில், ஸ்டிரைக்கிங் லெவன் அணி, யுனைடெட் அணி உட்பட நான்கு இடங்களை பிடித்த அணிகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன.சாந்தி விஜய் பள்ளி உடற்கல்வி ஆசிரியை உஷா, ஒய்.எம்சி.ஏ., நிர்வாகி ஜேம்ஸ், ஜெகதளா ஸ்போர்ட்ஸ் கிளப் வீரர் சந்தோஷ். ஹாக்கி யூனிட் ஆப் நீலகிரிஸ் அமைப்பு துணைத் தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் கோப்பைகளை வழங்கினர். அமைப்பு பொருளாளர் ராஜா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.வெற்றி பெற்ற அணிகளுக்கு ஹாக்கி யூனிட் ஆப் நீலகிரி அமைப்பின் தலைவர் அனந்தகிருஷ்ணன், செயலாளர் பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஏற்பாடுகளை வனமகன் குழுமத்தை சேர்ந்த சிவக்குமார், விஸ்வநாதன், பிரதீப் ஆகியோர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை