உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் திருப்தி: அமைச்சர் சாமிநாதன் தகவல்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் திருப்தி: அமைச்சர் சாமிநாதன் தகவல்

ஊட்டி : ''நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் திருப்திகரமாக உள்ளது,' என, அமைச்சர் சாமிநாதன் கூறினார்.நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தமிழக விருந்தினர் மாளிகையில் வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் பங்கேற்று, அனைத்து துறை அலுவலர்களிடம் வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, அமைச்சர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறுகையில், ''மழை பாதிப்புகளை சமாளிக்க நீலகிரி மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளது. இந்தப்பணி இதே வேகத்தில் தொடர வேண்டும்;தொய்வு ஏற்பட கூடாது என, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில், அதிக மழை பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக, 283 இடங்கள் கண்டறியப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த இடங்களில் அதிக மழை பெய்தால், அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களை தங்க வைக்க நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு உணவு உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.அரசு கொறடா ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

koderumanogaran
அக் 18, 2024 16:01

முன்னேற்பாடுகள் அழகாக செய்துள்ளதாக கோப்புகளை காட்டி அமைச்சர்களை திருப்தி படுத்துவதில் தமிழ் நாடு அரசு ஊழியர்களை மிஞ்ச யாரும் கிடையாது.பேரிடருக்கு இலக்காகும் 283பகுதிகளிலும் கட்டுமானங்கள் நடந்து வருவதை அமைச்சர் பார்வையிட வேண்டும். உதகை குன்னூர் மட்டும் நீலகிரி அல்ல.இதர குக் கிராம பகுதிகளுக்கும் சென்று மக்களின் குறைகளை கேட்டறிய வேண்டும்.அதன்பிறகு அறிக்கை அளிக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை