மேலும் செய்திகள்
கஞ்சா பறிமுதல்
23-Jun-2025
கோத்தகிரி; கோத்தகிரி அருகே, விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன், இருவர் கைது செய்யப்பட்டனர்.கோத்தகிரி கட்டபெட்டு பகுதியில், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்படி, இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையில், எஸ்.ஐ.,கள் தன சேகரன், யுவராஜ் மற்றும் பாலமுருகன் உட்பட, போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கட்டபெட்டு 'இன்கோ' தொழிற்சாலை அருகே சாலையில், இருவர் பையுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்ததில், ஒன்றரை கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.போலீசார் நடத்திய விசாரணையில், 'குன்னுார் அருகே அருவங்காடு ஒசஹட்டி பகுதியை சேர்ந்த பர்கான்,21,மற்றும் திருவண்ணாமலை சமுத்திரம் ஏரிக்கரையை சேர்ந்த சிவலிங்கம்,30, ஆகியோர், வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சாவை வாங்கி, கட்டப்பெட்டு பகுதியில் விற்பனை செய்து வந்தனர்,' என்பது தெரிய வந்தது. அவர்கள் வைத்திருந்த, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.
23-Jun-2025