உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி பஸ் ஸ்டாண்ட் சாலையோரம் பார்க்கிங் செய்ய இடமில்லாமல் அவதி

ஊட்டி பஸ் ஸ்டாண்ட் சாலையோரம் பார்க்கிங் செய்ய இடமில்லாமல் அவதி

ஊட்டி : 'ஊட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நாள்முழுவதும் நிறுத்தப்படும் வாகனங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.ஊட்டி மத்திய பஸ் ஸ்டாண்டுக்கு உள்ளூர் உட்பட பிற மாவட்டம், மாநிலங்களிலிருந்து ஏராளமான அரசு பஸ்கள் வந்து செல்கிறது. பஸ் ஸ்டாண்ட் வெளிபுறத்தில் தனியார் வாகனங்கள், ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன.தவிர, ' சில போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் ஊட்டியிலிருந்து பிற பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவர்கள்,' என, ஏராளமானோர் தங்களின் வாகனங்களை பஸ் ஸ்டாண்டை ஒட்டியுள்ள 'பார்க்கிங்' பகுதிகளில் நாள் முழுவதும் நிறுத்தி செல்கின்றனர். சிலர் வாகனங்களை பல நாட்கள் நிறுத்தி செல்கின்றனர்.இதனால், பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு வருபவர்களின் வாகனங்களை 'பார்க்கிங்' செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.அவர்கள் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி செல்வதால், அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. இந்த பிரச்னை குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.உள்ளூர் மக்கள் கூறுகையில், 'போலீசார் குறிப்பிட்ட பகுதியை ஆய்வு செய்து, நாள் முழுவதும் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அல்லது பார்க்கிங் கட்டணம் வசூலிக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை