உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி பள்ளியில் மாணவ நிர்வாகிகள் பதவியேற்பு விழா

ஊட்டி பள்ளியில் மாணவ நிர்வாகிகள் பதவியேற்பு விழா

ஊட்டி; ஊட்டி கிரசன்ட் கேஸ்டில் பப்ளிக் பள்ளியில் மாணவர்களுக்கான நிர்வாகிகள் தேர்வு நடந்தது. அதன் பதவியேற்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு, நீலகிரி எஸ்.பி., நிஷா தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் உமர் பரூக், பள்ளி முதல்வர் ஆல்டிரிஜ், துணை முதல்வர் மேகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில், பள்ளி தலைமை மாணவன் சுதர்ஷன், தலைமை மாணவி அங்கிதா தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றனர். தொடர்ந்து, நான்கு அணிகளுக்கான, தலைமை மாணவ மாணவியர்களாக, பவிஷ் ரமணன், சுயோ னா, டேரல் ஸ்டீபன், தனிஷ், நித்திஷ் சர்மா, தனிஷ்கா, கனிஷ், சாதனா, ரிதா,ஆசிஷ், ஜீவிகேஸ், ஜெசோத்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து, மாணவ, மாணவியர் உறுதி மொழி ஏற்று கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி