உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பூங்கா கண்ணாடி மாளிகை ரூ. 5 லட்சத்தில் சீரமைப்பு

பூங்கா கண்ணாடி மாளிகை ரூ. 5 லட்சத்தில் சீரமைப்பு

ஊட்டி,; ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா வளாகத்தில் உள்ள கள்ளிச்செடி கண்ணாடி மாளிகை சீரமைக்கப்பட்டுள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டு தோறும் மே மாதம் மலர் கண்காட்சி நடக்கிறது. செப்., மாதம் இரண்டாவது சீசன் நடக்கிறது.சீசன் சமயங்களில் சுற்றுலா பயணியரை மகிழ்விக்க, ஐந்து லட்சம் மலர்கள் கட்சிபடுத்தப்படுகின்றன.தவிர, பூங்கா வளாகத்தில் தனித்தனியாக பழமை வாய்ந்த கண்ணாடி மாளிகை உள்ளது. அதில், பல்வேறு வகையான மலர் செடிகள், பெரணி, கள்ளிச் செடிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.இத்தாலியன் கார்டன் அருகே உள்ள கண்ணாடி மாளிகை பராமரிப்பின்றி காணப்பட்டது. மேற்கூரை அபாயகரமாக இருந்ததால் கள்ளி செடி கண்ணாடி மாளிகையை பராமரிக்க பூங்கா நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.அதன்படி, 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. முழு வீச்சில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. பூங்கா நிர்வாகம் கூறுகையில்,'கள்ளிச்செடி வைக்கப்படும் கண்ணாடி மாளிகை, 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. சீசனுக்கு முன்பாக பணிகள் முடிந்து திறக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை