உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆற்றை கடக்க பாலம் இல்லாததால் மக்கள் அவதி

ஆற்றை கடக்க பாலம் இல்லாததால் மக்கள் அவதி

பந்தலுார்; பந்தலுார் அருகே சப்பந்தோடு பகுதியில் ஆற்றை கடக்க பாலம் இல்லாததால், மக்கள் தற்காலிக பாலத்தில் தடுமாறி நடக்கும் நிலை தொடர்கிறது.பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சப்பந்தோடு கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சாலையின் குறுக்கே பாயும் ஆற்றை கடக்க, ஊராட்சி ஒன்றியம் சார்பில் பாலம் அமைக்கப்பட்டது.ஆனால், இதனை ஒட்டி உள்ள குடியிருப்புகளுக்கு செல்ல, நடைபாதை வசதி இல்லாத நிலையில், ஆற்றின் மறு கரையில் உள்ள, வனப்பகுதி வழியாக உள்ள ஒற்றையடி நடைபாதையை பயன்படுத்தி வருகின்றனர். நடைபாதையிலிருந்து வீடுகளுக்கு செல்ல ஆற்றில் பாலம் வசதி இல்லாத நிலையில், பாக்கு மரங்களில் தற்காலிக பாலம் அமைத்து ஆற்றை கடந்து வருகின்றனர். கோடை காலங்களில் இதனால் பிரச்னை இல்லாவிட்டாலும், மழை காலங்களில் இந்த பாலத்திலும் நடக்க முடியாத நிலையில், இப்பகுதி மக்கள் வெளியில் செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே, இந்த பகுதியில் மக்கள் நடந்து செல்ல ஏதுவாக சிறுபாலம் ஒன்று அமைத்து தர வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ