உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பாம்பேகேசில் சாலையில் மேனுவல் பாதிப்பால் செடியை நட்ட அவலம்

பாம்பேகேசில் சாலையில் மேனுவல் பாதிப்பால் செடியை நட்ட அவலம்

ஊட்டி; ஊட்டி பாம்பேகேசில் சாலையில் மேனுவல் பாதிப்பை சரி செய்யாமல் செடியை நட்டு வைத்திருப்பதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.ஊட்டி பாம்பேகேசில் பகுதி வழியாக நெடுஞ்சாலைத்துறை, ரோஜா பூங்கா, தனியார் கல்லுாரி, பிரசித்தி பெற்ற எல்க்ஹில் முருகன் கோவிலுக்கு செல்ல பிரதான சாலை என்பதால் தினமும் ஏராளமான வாகனங்கள், பொதுமக்கள் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.ரோஜா பூங்கா செல்லும் முகப்பு சாலையில் பாதாள சாக்கடையின் மேனுவல் பழுதடைந்துள்ளது. வாகனங்கள் விபத்து அபாயத்தால் அப்பகுதியில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கும் வகையில், மேனுவல் மேல் செடியை நட்டு வைத்துள்ளனர். 'நகராட்சி நிர்வாகம் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி