உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வாகன சோதனையில் போலீசார் பாடி ஓன் கேமரா பொருத்த உத்தரவு

வாகன சோதனையில் போலீசார் பாடி ஓன் கேமரா பொருத்த உத்தரவு

கூடலுார்; நீலகிரி மாவட்டம் கூடலுாரை ஒட்டியுள்ள, தமிழகம் - கேரளா - கர்நாடக எல்லையான நாடுகாணி, சோலாடி, தாளூர், நம்பியார்குன்னு, பாட்டவயல் உள்ளிட்ட, 10 இடங்களில் போலீஸ் சோதனை சாவடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்வழியாக, சட்ட விரோதமாக போதை மற்றும் பிற கடத்தல் பொருட்கள் எடுத்து வருவதை தடுக்க, போலீசார், வாகனங்களை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பணியில் உள்ள போலீசார் தங்கள் சட்டைகளில், 'பாடி ஓன் கேமரா' பொருத்தி வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கேமராவில், சோதனை பணிகள் முழுதும் வீடியோவாக பதிவு செய்யப்படுகின்றன.போலீசார் கூறுகையில், 'மாநில எல்லைகளில் நடக்கும் வாகன சோதனையில் வெளிப்படை தன்மையை பின்பற்றும் வகையில், 'பாடி ஓன் கேமரா'வை சட்டையில் பொருத்த உத்தரவு வந்துள்ளது. இதில், பணிகள் அணைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்படுகின்றன. இதனால், பல்வேறு சமூக விரோத செயல்கள்; தேவையில்லாத புகார்களை தவிர்க்க முடியும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை