மேலும் செய்திகள்
மே தின கொண்டாட்டம்; தொழிற்சங்கத்தினர் பேரணி
02-May-2025
கூடலுார்,; மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நீலகிரி எம்.பி., ராஜா நிவாரண உதவிகள் வழங்கினார்.கூடலுாரில் மழை பாதிப்பு காரணமாக முன்னெச்சரிக்கையாக, மீட்கப்பட்டு புத்துார்வயல் அரசு பள்ளியில் தங்க வைத்துள்ள வடவயல் கிராமத்தை சேர்ந்த பழங்குடியினரை, நீலகிரி எம்.பி., ராஜா சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கினார். மேலும், கூடலுார், பந்தலுார் பகுதிகளில் சேதமடைந்த, 12 வீடுகளின் உரிமையாளர்களுக்கு அரசு சார்பில் தலா, 8000 ரூபாய், தி.மு.க., சார்பில் தலா,10 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கினார். தொடர்ந்து, தொரப்பள்ளி அருகே துார்வாரப்பட்ட ஆற்றையும், அதனை ஒட்டியுள்ள இருவயல் கிராமத்தையும் ஆய்வு செய்தார்.மாவட்ட கூடுதல் கலெக்டர் கவுசிக், அரசு கொறடா ராமச்சந்திரன், ஆர்.டி.ஓ., (பொ.,) சங்கீதா, நகராட்சி தலைவர் பரிமளா, தாசில்தார் முத்துமாரி, அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
02-May-2025