மேலும் செய்திகள்
ஆட்டோ நலச்சங்க பொதுக்குழு கூட்டம்
14-Jun-2025
குன்னுார்: குன்னுார் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில், பாதுகாப்பு தொழிற்சாலை தொழிலாளர் சங்கம் (டி.எப்.எல்.யு.,) செயல்பட்டு வருகிறது. சங்கத்திற்கு, அரசு அங்கீகாரம் அளித்ததை தொடர்ந்து, அருவங்காடு கலாசார மண்டபத்தில் விழா நடத்தப்பட்டது. தற்போதைய மற்றும் ஓய்வுபெற்ற டி.எப்.எல் யு. உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர். சங்க இணை செயலாளர் சிவகுமார் வரவேற்றார். தலைவர் முகமது அன்சார் தலைமைவகித்தார். பொது செயலாளர் வெங்கடேஷ் ராவ், தொழிற்சங்கத்தின் சிறப்பு குறித்து பேசினார். தொடர்ந்து நடனம் மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பிரேம்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
14-Jun-2025