உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரிக்கு மீண்டும் ரெட் அலர்ட்; பேரிடர் தடுப்பு குழுவினர் தயார்

நீலகிரிக்கு மீண்டும் ரெட் அலர்ட்; பேரிடர் தடுப்பு குழுவினர் தயார்

ஊட்டி; நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் இரு வாரங்கள் மழை பெய்தது. அதன்பின், 'ரெட்அலர்ட்' அறிவிப்பால், தேசிய, மாநில பேரிடர் குழுவினர், நீலகிரியில் முகாமிட்டு மழை பாதிப்பு பகுதிகளுக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது, கடந்த ஒரு வாரமாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நீலகிரிக்கு கனமழை இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, ஊட்டி, குந்தா, கூடலுார், பந்தலுார் பகுதிகளில் பேரிடர் பகுதிகளில் வருவாய் துறையின் கண்காணிப்பை தீவிர்படுத்தி உள்ளனர்.ஊட்டி ஆர்.டி.ஓ., சதீஷ்குமார் கூறுகையில், ''சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரிக்கு, 14, 15ம் தேதிகளுக்கு 'ரெட் அலர்ட்' அறிவித்துள்ளது. தேசிய, மாநில பேரிடர் தடுப்பு குழுவினர், 30 பேர் ஊட்டிக்கு வர உள்ளனர். அனைத்து துறை ஒருங்கிணைப்புடன் பேரிடர் உபகரணங்களுடன் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளோம்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !