உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குறைந்த விலையில் குறுமிளகு செடி விற்பனை

குறைந்த விலையில் குறுமிளகு செடி விற்பனை

கூடலுார்; கூடலுார் தோட்டக்கலை பண்ணையில், குறைந்த விலையில் விற்பனைக்கு உள்ள குறுமிளகு, கிராம்பு செடிகள் விவசாயிகள் பெற்று பயனடையலாம். கூடலுார், நாடுகாணி அருகே உள்ள, பொன்னுார் தோட்டக்கலை பண்ணையில், தேயிலை, காபி, குறுமிளகு, கிராம்பு, பாக்கு, பட்டர் புரூட், சில்வர் ஓக் உள்ளிட்ட செடிகள் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்குகுறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. பருவமழை பெய்து வரும் நிலையில், விவசாயிகள் இந்த செடிகளை பெற்று நடவு செய்து வருகின்றனர். தற்போது, தேயிலை, காபி தோட்டங்களில் ஊடு பயிராக நடவு செய்யபடும் குறுமிளகு, கிராம்பு செடிகள் குறைந்த விலையில் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. இதனை, விவசாயிகள் பயன்படுத்திட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை அதிகாரிகள் கூறுகையில்,'குறுமிளகு, கிராம்பு செடிகள் தேவை உள்ளவர்கள், தோட்டக்கலை பண்ணை அலுவலர் அல்லது 63698-49831 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, விவரங்களை தெரிந்து செடிகளை பெற்று கொள்ளலாம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை