மேலும் செய்திகள்
பாலக்காடு எஸ்.பி.,யாக அஜித்குமார் நியமனம்
02-Jan-2025
பாலக்காடு, ; கேரள மாநிலம் பாலக்காடு கோட்டை மைதானத்தில் குடியரசு தின விழா நடந்தது. விழாவில், மின்சாரத் துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி கொடியேற்றி வைத்தார்.அவர் பேசியதாவது:அகிம்சை எனப்படும் மனித குலத்திற்கு காந்தியின் பங்களிப்பை இளைஞர்கள் மறந்துவிடக் கூடாது. அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியுள்ள அடிப்படை உரிமைகளை முழுமையாக பாதுகாக்க கடுமையாக உழைக்க வேண்டும்.மின்சாரத்துறையிலும் வரலாறு காணாத முன்னேற்றம் இந்த அரசின் காலத்தில் ஏற்பட்டுள்ளது. 2022ல் வெளியிட்ட 'நிதி ஆயோகின்' மாநில ஆற்றல் மற்றும் காலநிலை குறியீட்டில் கேரளா இரண்டாம் இடத்தில் உள்ளது.இது எரிசக்தி துறையை மேம்படுத்துவதற்கான மாநிலத்தின் முயற்சிகளுக்கு கிடைத்த அங்கீகாரமாகும்.இவ்வாறு, அமைச்சர் கிருஷ்ணன் குட்டி தெரிவித்தார்.முன்னதாக அமைச்சர் கிருஷ்ணன்குட்டி போலீஸ் படையின் அணிவகுப்பை பார்வையிட்டார்.எம்.எல்.ஏ.,க்கள் சாந்த குமாரி, ராகுல் விழாவில் மாங்கூட்டம், மாவட்ட கலெக்டர் சித்ரா, மாவட்ட எஸ்.பி., அஜித்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
02-Jan-2025