உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அசுத்தமான நீரை பயன்படுத்திய உணவகம் மூடல் குன்னுாரில் சாய டீ குறித்த ஆய்வு தீவிரம் குன்னுாரில் சாய டீ குறித்த ஆய்வு தீவிரம்

அசுத்தமான நீரை பயன்படுத்திய உணவகம் மூடல் குன்னுாரில் சாய டீ குறித்த ஆய்வு தீவிரம் குன்னுாரில் சாய டீ குறித்த ஆய்வு தீவிரம்

குன்னுார், ;குன்னுாரில் சாயம் கலந்த டீ குறித்து ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறையினர், அசுத்தமான நீரை பயன்படுத்திய உணவகத்தை மூட உத்தரவிட்டனர்.நீலகிரி மாவட்டத்தில் தேயிலை துாளில் சாயம் மற்றும் கலப்படம் செய்வது தொடர்பாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து, உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சுரேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகுமார், குமரேசன் உட்பட அதிகாரிகள், குன்னுார் பகுதிகளில் உள்ள டீ கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், வி.பி., தெரு நுழைவாயில் அருகே உள்ள 'ஆதிரா ஏஒன்' டீக்கடையில், சாயம் கலந்த டீ பயன்டுத்தியது தெரிய வந்ததால், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து, மார்க்கெட் மீன் கடைகள், பழரசம் தயாரிக்கும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, 'வெட்டி வைத்த பழங்கள், மீன்கள் வைக்க கூடாது,' என, அறிவுரை வழங்கினர். 'லெவல் கிராசிங்' அருகே உள்ள ஹைதராபாத் பிரியாணி உணவகத்தில், பழைய எண்ணெய் மீண்டும் பயன்படுத்தியது; இறைச்சியை வெட்டி குளிர்பதன பெட்டியில் வைத்தது; குப்பைகள் சூழ்ந்த இடத்தில் உள்ள அசுத்தமான கிணற்று நீரை உணவகத்திற்கு பயன்படுத்தியது தெரியவந்தது. உடனடியாக உணவகத்தை மூட வைத்த அதிகாரிகள், நகராட்சி சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பழைய இறைச்சி பயன்படுத்தியது தொடர்பாக, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.அதிகாரிகள் கூறுகையில், 'உணவகத்தில் முழு சுகாதார பணிகள் மேற்கொண்ட பின்பு தான் திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 கடைகளுக்கு, 19 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. ஆய்வு பணிகள் தொடர்ந்து நடக்கும். மாவட்டத்தில் சாயம் கலந்த டீ விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ