சிறியூர் மாரியம்மன் குண்டம் திருவிழா
கூடலூர்: மசினகுடி அருகே உள்ள, சிறியூர் மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா சிறப்பாக நடந்தது.முதுமலை மசினகுடி அருகே உள்ள, அருள்மிகு ஸ்ரீ சிறியூர் மாரியம்மன் கோவில் மகா பூ குண்டம் திருவிழா, 16ம் தேதி அம்மன் அழைப்புடன் துவங்கியது. நேற்று முன்தினம், மதியம் 1:00 மணிக்கு பூ குண்டத்துக்கு மரம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. 3:00 மணிக்கு ஸ்ரீ மாசி கரியபண்ட அய்யன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நள்ளிரவு, 12:00 மணிக்கு, தேர் ஊர்வலம் நடந்தது.நேற்று காலை, 7:00 பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை தரிசனம் செய்தனர்.