உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தென் மாநில தேயிலை ஏலம்: ரூ.43.17 கோடி மொத்த வருவாய்

தென் மாநில தேயிலை ஏலம்: ரூ.43.17 கோடி மொத்த வருவாய்

குன்னுார்: குன்னுார் தேயிலை ஏல மையத்தில், கடந்த வாரம் நடந்த, '22வது ஏலத்தில், 19.78 லட்சம் கிலோ இலை ரகம்; 5.36 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 25.14 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்தது.அதில், '16.31 லட்சம் கிலோ இலை ரகம்; 4.17 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 20.48 லட்சம் கிலோ விற்பனையானது. 81.47 சதவீதம் விற்றது. சராசரி விலை கிலோவிற்கு, 104.87 ரூபாய் என இருந்தது.சராசரி விலையில் ஒரு ரூபாய் சரிந்தது. மொத்த வருமானம், 21.48 கோடி ரூபாய் கிடைத்தது. கடந்த ஏலத்தை விட, வரத்து, விற்பனை சரிந்தது.

'டீசர்வ்' ஏலம்

நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் தேயிலை துாள் ஏலம், 'டீசர்வ்' மையத்தில் நடந்தது. இந்த ஏலத்திற்கு, 2.17 லட்சம் கிலோ வந்ததில், 2.13 லட்சம் கிலோ விற்பனையானது. கடந்த ஏலத்தை விட, வரத்து குறைந்த போதும் விற்பனையில் ஏற்றம் தென்பட்டது. சராசரி விலை, 89.97 என இருந்தது; கிலோவிற்கு ஒரு ரூபாய் வீழ்ச்சி கண்டது. 1.92 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. கோவை ஏல மையத்தில் நடந்த ஏலத்தில், '5.90 லட்சம் கிலோ வந்ததில், 4.59 லட்சம் கிலோ,' என, 77.75 சதவீதம் விற்பனையானது. சராசரி விலை, 124.26 ரூபாய் என இருந்தது; 4.25 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது; வரத்து, விற்பனை அதிகரித்து மொத்த வருவாய் உயர்ந்தது.கொச்சி ஏல மையத்தில், '12.43 லட்சம் கிலோ வந்ததில், 9.72 லட்சம் கிலோ,' என, 78.21 சதவீதம் விற்றது. சராசரி விலை, 159.53 ரூபாய் என இருந்தது. 15.52 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. வரத்து மற்றும் விற்பனையில், மொத்த வருவாய் சரிந்தது. தென் மாநில அளவில், 43.17 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. கடந்த ஏலத்தை விட, 87 லட்சம் ரூபாய் மொத்த வருவாய் குறைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !