உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சோலாடி அரசு பள்ளியில் பழங்குடியினருக்கு சிறப்பு முகாம்

சோலாடி அரசு பள்ளியில் பழங்குடியினருக்கு சிறப்பு முகாம்

பந்தலுார்; பந்தலுார் அருகே சோலாடி அரசு பள்ளியில் வருவாய் துறை சார்பில், தொல்குடி திட்டத்தின் கீழ் பழங்குடியினருக்கான சிறப்பு முகாம் நடந்தது. தாசில்தார் சிராஜூநிஷா தலைமை வகித்தார். பழங்குடியினர் மக்களுக்கான ஆதார், ஓய்வூதியம், ஜாதி சான்று உள்ளிட்ட பல்வேறு குறைகளுக்கான தீர்வு காணப்பட்டதுடன், 18- வயதிற்கு உட்பட்டோருக்கு புதிய ஆதார் அட்டைகள் பதிவு செய்யப்பட்டன. கிராமத்தில், பலருக்கு பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டைகளில் பெயர் மாறி பதிவு செய்யப்பட்டு இருந்ததுடன், பிறப்பு சான்றிதழ் இல்லாதது குறித்தும் மனு அளிக்கப்பட்டது. அதனை, 'சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி தீர்வு காணப்படும்,' என, தெரிவிக்கப்பட்டது. முகாமில், வருவாய் ஆய்வாளர் வாசுதேவன், வி.ஏ.ஓ.,சபீர், வருவாய் உதவியாளர் ராமராஜன், நீலகிரி வயநாடு ஆதிவாசிகள் நலச் சங்க மேலாளர் ஜான் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ