மேலும் செய்திகள்
அஞ்சல் ஆயுள் காப்பீடு குறைதீர்க்கும் முகாம்
22-Dec-2025
ஊட்டி: நீலகிரி மாவட்ட அஞ்சலக கூட்ட கண்காணிப்பாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு வாடிக்கையாளர்களின் புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு சிறப்பு குறைத்தீர்க்கும் முகாம், 29ம் தேதி காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணிவரை, கோத்தகிரி மற்றும் கூடலுார் துணை அஞ்சலகங்களில் நடக்கிறது. அதில், காப்பீடு தொடர்பான விண்ணப்பங்கள், இணைய வழி பிரீமியம் செலுத்துதல் குறித்த விபரங்கள், பாலிசி திருத்தம், புதுப்பித்தல் மற்றும் ஆவணங்கள் சம்பந்தப்பட்ட சந்தேகங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆவணங்களுடன் பங்கேற்று, வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். பாலிசி விபரங்கள், பிரீமியம் கட்டணம், ரசீது பெறுதல் போன்ற ஆன்லைன் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவைகள், பொது மக்களின் நேரத்தை மீதப்படுத்தி, தபால் துறையின் சேவைகளை மேலும் எளிமையாக்க உதவுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
22-Dec-2025