ஸ்ரீ மகாவிஷ்ணு கோவில் உழவாரப் பணியில் பக்தர்கள்
பந்தலுார்: பந்தலுார் அருகே பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், ஒரு கட்டமாக இன்று (நவ.,27) காலை முதல் பக்தர்கள் ஒன்றிணைந்து, கோவில் வளாகத்தில் உழவாரப் பணியில் ஈடுபட்டனர். ஆண் மற்றும் பெண் பக்தர்கள் இணைந்து, கோவில் வளாகத்தில் இருந்த புதர் செடிகள் மற்றும் குப்பைகளை முழுமையாக அகற்றினர். அத்துடன் கட்டுமான பணியின் போது இடிக்கப்பட்ட கட்டுமான பொருட்களை அப்புறப்படுத்தி சீரமைத்தனர். இந்தப் பணியில் பொன்னானி, அம்மன்காவு, குந்தலாடி, புலியாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.