உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியையின் கணவருக்கு ஆயுள்

மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியையின் கணவருக்கு ஆயுள்

ஊட்டி; மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டியூஷன் ஆசிரியையின் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா கோர்ட் தீர்ப்பளித்தது. கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதியின் மகள், பிளஸ்--2 படித்து கொண்டிருந்த போது, ஒரு ஆசிரியையிடம் டியூஷன் சென்றார். ஆசிரியையின் கணவர் அக்சித், 27, மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அக்சித் மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால், பெற்றோர் மாணவியை கோத்தகிரியில் உள்ள சித்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். சித்தி வீட்டில் தங்கியிருந்த மாணவி திடீரென மாயமானார். கோத்தகிரி போலீஸ் ஸ்டேஷனில் மாணவியின் பெற்றோர், 2022ம் ஆண்டு டிச., 11ம் தேதி புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்த நிலையில், இருவரையும் கோவையில் மீட்டனர். போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையில் விசாரணை மேற்கொண்டு அக்சித்தை, 2022 ம் ஆண்டு டிச., 16ம் தேதி கைது செய்தனர். இவ்வழக்கு, ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அக்சித் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதால் ஆயுள் தண்டனை, 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் செந்தில் குமார் ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !