கோடை விழா புகைப்பட போட்டி 12க்குள் படங்களை அனுப்ப வேண்டும்
ஊட்டி : புகைப்பட போட்டி யில் இடம்பெறும் சிறந்த புகைப்படத்திற்கு பரிசுகள் காத்திருக்கிறது. கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை: கோடை விழாவின் ஒரு பகுதியாக வரும், 13ம் தேதி காலை, 11:00 மணிக்கு ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி நடக்கிறது. ஆடவர், மகளிர் என தனித்தனியாகவும், இரு பாலரும் இணைந்து பங்கு பெறும் போட்டியும் நடக்கிறது. அதேபோல், நீலகிரி மாவட்ட வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தப்பட உள்ள புகைப்பட இக்கண்காட்சியில் நீலகிரி மாவட்டத்தில் இயற்கை எழில், வனவிலங்குகள் மற்றும் பாரம்பரிய கட்டடம் போன்ற சிறப்புமிகு வண்ணப் புகைப்படங்கள் இடம் பெறும். இதனை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டுக்களிக்கலாம். கண்காட்சியின் ஒரு பகுதியாக புகைப்படம் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அதில், நீலகிரி மாவட்டத்தில் எடுக்கப்பட்ட வன விலங்குகள், பழங்குடியினர் மக்கள் கலாசாரம், இயற்கை வனப்புடைய நிலம், பாரம்பரிய கட்டடங்கள் மற்றும் நீலகிரி மக்கள் குறித்த புகைப்படங்களை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் காட்சிப்படுத்தும் வகையில், 12 ம் தேதிக்குள் gmail.comஎன்ற மெயிலில் அனுப்பி வைக்க வேண்டும். சிறந்த புகைப்படங்களுக்கு கோடை விழாவில் நிறைவு நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.