உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  காட்டு யானையிடம் தப்பிய கண்காணிப்பு ஊழியர்கள்

 காட்டு யானையிடம் தப்பிய கண்காணிப்பு ஊழியர்கள்

பந்தலுார்: சேரம்பாடி மற்றும் பிதர்காடு வனச்சரக எல்லைப் பகுதியான, ஏலமன்னா புல்வெளியில் நான்கு யானைகள் கொண்ட கூட்டம் நேற்று மதியம் முகாமிட்டு இருந்தன. சாலையின் அருகே யானைகள் வந்ததால், யானை கண்காணிப்பு குழு இளைஞர்கள் யானைகளின் அருகே சென்று அவற்றை துரத்த முயன்றனர். அதில், ஒரு யானை கோபம் அடைந்து, இளைஞர்களை திடீரென துரத்தியது. அங்கிருந்து ஓடி அவர்கள் உயிர்தப்பினர். மக்கள் கூறுகையில், 'எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், அசட்டு துணிச்சலில் யானைகள் அருகே சென்று துரத்துவதை, வனக்குழுவினர் தவிர்க்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !