மகா விஷ்ணு கோவிலில் நடந்த சுயம்வர நிகழ்ச்சி
பந்தலுார் : பந்தலுார் அருகே பொன்னானி மகா விஷ்ணு கோவிலில், நடந்த ருக்மணி சுயம்வர நிகழ்ச்சி காலை கணபதி ஹோமம், விஷ்ணு சஹஸ்ரநாமம், புத்தக பூஜை, பாகவத கீர்த்தனையுடன் துவங்கியது. தொடர்ந்து, குந்தலாடி மாரியம்மன் கோவில் வளாகத்தில், கிருஷ்ணர்; ராதை வேடமணிந்த, சிறுவர் சிறுமியருடன் ஊர்வலம் துவங்கியது. தொடர்ந்து, ஸ்ரீ பகவதி கோவில் சென்று அங்கிருந்து, சுயம்வர நிகழ்ச்சிக்கு தேவையான சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலம், பொன்னானி மாரியம்மன் கோவில் வளாகம் வந்து, அங்கிருந்து விஷ்ணு கோவிலை வந்தடைந்தது. அங்கே நிவேத்தியம் செய்யப்பட்டு, பக்தர்கள் முன்னிலையில் சுயம்வரம் நடந்தது. தொடர்ந்து, அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது.